RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

யார் தயவால் ஆட்சி நடக்கிறது?: கொந்தளித்த முதல்வர் விஜய்

சென்னை:
17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் 3-வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளையை தற்போது கஜானாவிற்கு சென்று சேர்த்துக்கொண்டிருக்கி றோம். மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டால் விட மாட்டோம். மக்கள் தயவால் தான் த.வெ.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளால் தான் ஆட்சி நடக்கிறது.
“இப்போது புதிதாக ஒரு ஆயுதத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? ‘அவர்களுடைய தயவால்தான் நமது ஆட்சி நடக்கிறது’ என்பதுதான் அது. இந்த ஆட்சி மக்கள் தயவாலும், மனசாட்சியுள்ள சக்திகளின் ஆதரவாலும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. ‘நாங்கள் தான் அனுப்பி வைத்தோம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம்’ என்று சிலர் கூறுகிறார்களே, அப்படி அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தபோது ஏன் கதறுகிறீர்கள்? ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு கதறல்?
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது அவர்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்று கூறுகிறார்கள். அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்ததும் அவர்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்றுதான் சொல்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, இதில் எங்கிருந்து ‘நாங்கள் தான் அனுப்பி வைத்தோம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம்’ என்று சொல்வது, புரியவில்லையே. ஆனால், மக்களுக்கு எல்லாமே நன்றாகப் புரியும். அவர்கள் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

Recent News

மக்களின் பாதுகாப்பு பிரச்சனைக்க கால்ஷீட் எப்போது? – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதிவு

மக்களின் பாதுகாப்பு பிரச்சனைக்க…

சென்னை:தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

கூட்டணி இல்லாமல் திமுகவால் வெல்ல முடியாது: காங்கிரஸ்

கூட்டணி இல்லாமல் திமுகவால்…

தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசை…

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; தங்கம் விலை சற்று குறைந்தது

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி…

சென்னையில் தங்கம் விலை இன்று சற்று…

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2…

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை…

தங்கம் விலை சவரனுக்கு…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…

கருமந்துறை தலக்கரை –…

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற…

1 17 18 19 20 21 33