RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

புதுடெல்லி:
அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித மான முன்னேற்றமும் இல்லாமல் இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டு இருக்கும் வேளையில், சர்வதேச சந்தையில் எண் ணெய் விலை தொடர்ந்து 105 டாலருக்கு மேல் நிலைபெற்றுள்ளது. இந்த விலை உயர்வு கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் உலக நாடுகளுக்கு பெரும் பாதிப்பை முதலீட்டு சந்தையிலும், பொரு ளாதாரத்திலும், நாணய மதிப்பிலும் ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 மாதமாக தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் புதிய வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மோடி தங்கம் வாங்க வேண்டாம் என கூறிய பின்பும்.
டெல்லி அரசும், மத்திய நிதியமைச்சகமும் வொர்க் ப்ரம் ஹோம், எரிபொருள் சிக்கன நடவடிக்கை அறிவித்த பின்பும் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து ரூபாய் மதிப்பு தரையை தட்டியுள்ளது.
புதன்கிழமை வர்த்த கத்தில் அமெரிக்க டால ருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 96.90 ஆக வீழ்ச்சி யடைந்தது. இது வரலாறு காணாத புதிய சரிவாகும். 2 நாட்களுக்கு முன்பு பதிவான வரலாற்று சரிவான 96.6150 ரூபாய் அளவீட்டை கடந்து புது சரிவை பதிவு செய்துள் ளது. ஈரான் போர் தொடங்கிய பிப்ரவரி இறுதியில் இருந்து இப் போது வரை ரூபாய் மதிப்பு சுமார் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எண் ணெய் விலை உயர்வு உலகம் முழுவதும் பணவீக்க அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. இதனால் பல நாடுகளில் பத்திர வட்டி விகிதங்கள் பல ஆண்டுகளில் இல்லாத உயரத்தை எட்டியுள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் முதலீடுகள் திரும்ப பெறப்பட்டு பத்திர முதலீட்டில் செய்யப் பட்டது. இது இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி யுள்ளது. ஒருப்பக்கம் அதிகப்படியான எரிசக்தி விலை,மறுப் புறம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முத லீட்டு வெளியேற்றம் ஆகியவை இந்தியாவின் பொருளாதார சம நிலையை தாக்கி நாணய இருப்பில் பெரிய அளவி லான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங் களில் வெளிநாட்டு முதலீட் டாளர்கள் இந்தியப் பங்கு சந்தை மற்றும் பத்திரச்சந்தையில் இருந்து சுமார் 22 பில்லியன் டாலர் அளவுக்கு பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்கு மதியை அதிகம் நம்பி யுள்ள இந்தியா இந்த விலை உயர்வால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே லிட்டருக்கு பெட்ரோல். டீசல் விலையை 4 ரூபாய் வரையில் உயர்த் தியுள்ளது. எரிபொருள் விலை காரணமாக உணவு பொருட்கள் முதல் தொழிற்சாலை உற்பத்தி பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இது நாட்டில் பணவீக்கத்தை அதிகரித்து பெரும் பாதிப்பை உருவாக்கும் என பொரு ளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதே வேளையில் ரூபாய் மதிப்பு 97.50 ரூபாய் அளவுக்கு குறைந்தால் தற்போது பெட்ரோல். டீசல் விலையில் கொண்டுவரப்பட்ட 4 ரூபாய் விலை உயர்வு மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு நன்மை முழுமையாக குறைந்துவிடும் என கணக்கிடப்பட்டு உள்ளது. தற்போது ஈரான் அமெ ரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுகள் மீண்டும் தொடங்கினால் மட்டுமே எண்ணெய் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.
ஆனால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்காவும் இஸ்ரோலும் வாஷிங்டனில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதாக தசுவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் செலவுகளை கவனமாகத் திட்டமிட வேண்டிய காலம் இது என பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Recent News

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

1 7 8 9 10 11 12