RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன், இறால் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் செயின்ட் பீட்டர் பால் என்ற தொழிற்சாலையில் நேற்று முன்தினம் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 77 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஜூவான், மலோத்தி ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
திருவள்ளூர் பகுதியில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் 49 பேரும், மீதி உள்ளவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்கள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
நேற்று காலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா ஜூங்கா (18), ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீதா ஜூவாங்கா (24), தனியார் மருத்துவவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபினி (22) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மதியம் ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பவதி ஜூங்கா (19), புலோமினி ஆகியோரும் உயிரிழந்தனர். மாலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீதா (23) என்ற பெண் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை நேற்று 8 ஆக உயர்ந்தது. உயிரிழந்த 8 பேரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அஞ்சிலா சுரின் (26) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 60 தொழிலாளர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Recent News

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 28 29 30 31 32 33