RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில் இந்த ஆண்டு அதிக அளவு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளதை தொடர்ந்து. விவசாயிகள் வேளாண் பயிர்களை தொழில் நுட்ப முறைகளை பயன் படுத்தி பாதுகாத்து பயன்பெற வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார். எல்நினோ நிகழ்வினால், காலநிலையில் இந்த ஆண்டு அதிக அளவு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதனை எதிர் கொள்ளும் வகையில் நடப்பு கோடை பருவத்தில் வெப்ப அலையில் இருந்து பயிர்களை பாது காத்திட கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி. விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார். கோடை உழவு அதிக பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும். விதை நேர்த்தி செய்ய வேண்டும். உயிர் உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட வேண்டும். நண்பகலில் நீர்ப்பாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும். பயிர்களுக்கு இடையே தகுந்த இடைவெளி மற்றும் சுவாத்து முறைகளை மேற்கொண்டு காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண் டும். மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் மேற்பரப்பு வெப்பநிலையை குறைக்கவும் இயற்கை முறை மூடாக்குகள் (வைக்கோல். கரும்புத் தொகை) ஏற்படுத்த வேண்டும். நீராவிப்போக்குத் தடுப்புத் தெளிப்புகளைப் பரிந்துரைக்கப்பட்டவாறு பயன்படுத்த வேண்டும். விரைவில் அழுகக்கூடிய பயிர்களில் அதிகாலையில் அறுவடை மேற்கொள்ள வேண்டும். இலை வழி பயிர் ஊக்கிகளை நல்ல தரமான நீரைப் பயன்படுத்தி தெளிக்க வேண்டும்.
நெல் பயிர்களை பாதுகாப்பது தொடர்பான அறிவுரைகள்: பல்வேறு பயிர் வளர்ச்சி நிலைகளில் 3% கயோலின் (Ka olin) அல்லது 19 பொட்டாசியம் குளோரைடு (ரிசிறீ) கரைசலை இலை வழியாகத் தெளிக்க வேண்டும். பிபிஎஃம் (PPFM-Pink Pigment-ed Faculatative Methy-lotrophs- நுண்ணுயிரிகள்) எக்டருக்கு 500 மில்லி வீதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இலை வழியாகத் தெளிக்க வேண்டும் தானியங்கள் நாட்களுக்கு முன்னரும். பூக்கும் பருவத்திலும் 2% மோனா அம்மோனியம் பாஸ்பேட் (MAP) + 1% பொட்டாசியம் குளோரைடு (KCL) கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும். வளர்ச்சிப் பருவத்தில் (குறுவைப் பருவத்தின் போது) 1% பொட்டாசியம் குளோரைடு (KCL) + சைகோசல் (CCC) 500 ppm அளவில் கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும். எனவே, விவசாயிகள் விவசாயிகள் வேளாண் பயிர்களை தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி பாதுகாத்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.

Recent News

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 சரிவு

தங்கம் விலை பவுனுக்கு…

சென்னை:தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்ததுள்ளது.…

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் 2-வது நாளாக முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன்…

சென்னை,தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச்…

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில் பேரிகார்டை இழுத்துச் சென்ற ஆட்டோ

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில்…

சென்னை:சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆட்டோ…

திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

திருப்பத்தூரில் போதை பொருள்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவ ட்ட புதிய பேருந்து…

திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணத்தை உயர்த்தக்கூடாது; சீனிவாச சித்தர் சுவாமிகள்

திருச்செந்தூர் கோவில் தரிசன…

தூத்துக்குடி:திருச்செந்தூர் கோயி லில் தரிசன கட்டணத்தை…

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

நீர் தேர்வு குழப்பம்:…

தூத்துக்குடி:தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி…

1 7 8 9 10 11 33