RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

சென்னை:
“தமிழகத்தில் மின்கட்ட ணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப் பப்பட்டு வருகிறது. மின் வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது” என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறு ம்போது, “மின்துறையில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. சோலார் பேனல் கொள்முதல் விவகாரத்தில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தா லும் நடவடிக்கை எடுக் கப்படும். மின்தடை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாலும் நடவடிக்கை மேற்கொள்ள பணிகள் நடந்து வருகிறது.

டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் எந்த வித முறைகேடும் நடக்காது. மின்சாரத் துறை இரண் டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊழி யர்கள் பற்றாக்குறை யும் உள்ளது. இதற்கு முன்னர் இந்த யார் துறையை நிர்வகித்தார்கள் எனத் தெரியும். கடந்த ஓராண் டாக, மற்ற ஒப்பந்தப் பணிக ளுக்காக தோண்டப்படும் குழிகளில் 160 இடங்களில் பவர் கேபிள்கள் வெட்டப்பட்டுள்ளன.

முதலில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். டெண்டர் எடுப்பதில் இனி எந்த மறைமுக டீலிங்கும் நடைபெறாது. மின்சார விநியோகத்தை சீராக செய்ய அறிவுறுத் தப்பட்டுள்ளது.
மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது. தமிழ கத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Recent News

கோரிக்கை மனுக்களை பெற்ற கன்னியாகுமரி கலெக்டர்

கோரிக்கை மனுக்களை பெற்ற…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட் டம் கந்திலி கிழக்கு…

தமிழக ஆளுனருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தமிழக ஆளுனருடன் நீலகிரி…

தமிழ்நாடு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு…

யார் தயவால் ஆட்சி நடக்கிறது?: கொந்தளித்த முதல்வர் விஜய்

யார் தயவால் ஆட்சி…

சென்னை:17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்…

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது சட்டசபை: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது…

சென்னை:சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி…

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

1 10 11 12 13 14 33