RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தவெகவிற்கு தாவ துடிக்கும் மாற்றுக் கட்சியினர்!

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜோசப் விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. இளைஞர்களும், இளம் பெண்களும் என தனது வாக்குகளை தவெகவிற்கு வாரி வழங்கினர். ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நடிகர் விஜய் படிப்படியாக தனது திறமைகளை வெளியே காட்ட ஆரம்பித்தார். விஜய் வருகையால் அதிமுக, திமுகவின் செல்வாக்கு குறைந்தது. அதிமுக இரண்டாக பிரிந்தது.


அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் அதாவது, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் எம்.எஸ்.எம். ஆனந்தன் என அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 37 மூத்த நிர்வாகிகள் சமீபத்தில் தவெகவில் இணைந்தனர்.

விஜயதாரணி


இப்போது காங்ரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி திடீரென பாஜகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்துள்ளார். அவர் மட்டுமின்றி அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, இளவரசன், பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முருகேசன், முன்னாள் எம்எல்ஏ ரவி, திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா உள்ளிட்டோர் தவெக கட்சியில் இணைந்தனர். முக்கிய நிர்வாகிகள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இப்போது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படியும், அப்படியுமாக ஏதாவது ஒரு காரணத்திற்காக தமிழக அரசியல் கட்சிகளில் இருந்து அதன் உறுப்பினர்கள் அந்த கட்சியை விட்டு வெளியேறி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய தயாராக உள்ளனர். இன்னும் எத்தனை பேரோ?
இதற்கு காரணம் கட்சியின் மீது உள்ள வெறுப்பு, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தலை குறி வைத்துத்தான் என்றே கூறப்படுகிறது.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33