RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

நாகர்கோவில்:
திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக் குப் பின்னர் கடந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்த தால் , அதை கணக்கில் கொண்டு, ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான நேற்று 22-ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெற்றது.
108 வைணவத்திருப்பதி களில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்ற திருத் தலமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக த்துக்குப்பின்னர் கோவி லில் சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது.
நேற்று கோவில் நடை திறப்பைத்தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடந்தது. தொடர்ந்து சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், ஆகியன நடந்தது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்ட பத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை கோகுல் தந்திரி நடத்தினார். பின்னர் ஆதி கேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் சன்னதியில் நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடந்தது.மதியம் ஸ்ரீபலி எழுந்தருளல், ஸ்ரீபூதபலி, அன்னதானம் மாலையில் அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தது.
இதில் ஏராளமான பக் தர்கள் பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Recent News

VB-G RAM G – திட்டம் இன்று முதல் அமல்

VB-G RAM G…

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி…

வாட்ஸ்அப் செயலியில் பயனர் பெயர் அறிமுகம்: சிஇஓ குணால் ஷா வெளியிட்ட பகிர்வு

வாட்ஸ்அப் செயலியில் பயனர்…

சென்னை:வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர்…

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிக்கான…

டெல்லி:20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில்…

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த வாலிபர் தலையை உடைத்த கயாடு லோஹர்.. இணையத்தில் வைரலாகும் பேச்சு

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த…

கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் திரையுலகில்…

5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை; வெளிவந்தது உண்மை

5 வயது சிறுமியை…

மதுரை:மதுரை பைகாரா பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம்…

’தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதா? – திருமாவளவன் அதிரடி பேட்டி

’தவெக ஆட்சி கவிழ…

மதுரை:விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை…

1 6 7 8 9 10 33