RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை:
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் இணைந்து உருவாக்கிய சங்க நிர்வாகிகள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமாரை நேரில் சந்தித்து தங்களது சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
இந்த சந்திப்பில் சங்கத் தலைவர் சிகார் கார்த்திகேசன், செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் செந்தில், பொருளாளர் தீபக் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதிகபாரம் ஏற்றக்கூடாது என்ற விதிமுறையை முறையாக பின்பற்றி, லாரிகள் பாதுகாப்பாக இயக்கப்படும் என்பதையும், அதனை கண்காணிக்கும் பொறுப்பை சங்கம் மேற்கொள்ளும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் லாரி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விதிமுறை மீறல் குறையவும் இது உதவும் எனவும் ஆட்சியரிடம் விளக்கமளித்தனர்.
இதனை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது ஒருமித்த கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சியை ஆட்சியர் வரவேற்று, அரசு விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து செயல்பட சங்கத்தினருக்கு அறிவுறுத்தினார்.

Recent News

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

பங்குச் சந்தையில் நஷ்டம்……

சூரத்:கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல்…

அமோனியா வாயு கசிவு; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு;…

திரு​வள்​ளூர்:திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல்…

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை ருசித்த எகிப்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்…

வான்கோவர்:வான்கோவரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை…

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளி

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்:…

சென்னை:தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் முதல்…

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்……

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு இன்று…

தமிழக சட்டசபை தொடங்கியது…. முதல்வர் பிறந்தநாள் புதிய அறிவிப்பு வெளியாகுமா.?

தமிழக சட்டசபை தொடங்கியது….…

சென்னை:இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று…

1 13 14 15 16 17 33