RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். அவரது கணவர் விமானப்​படை அதி​காரி​யாக பணி​யாற்றி வரு​கிறார். ஹஸ்​ரத் மவுலானா என்​பவர் முன்​னிலை​யில் அப்பெண்ணின் விருப்​பத்​துக்கு மாறாக வலுக்​கட்​டாய​மாக மதமாற்​றச் சடங்​கு​களைச் செய்​துள்ளார். இந்த அதிர்ச்சிகர சம்பவம் வீடியோ​வும் வெளி​யாகி​யுள்​ளது.
இந்த சம்​பவம் பற்றி அறிந்த அவரது கணவர், புகார் அளித்​ததை அடுத்து இந்த சம்​பவம் தற்​போது வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. போலீ​ஸார் பதிவு செய்​துள்ள முதல் தகவல் அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் நிலம் வாங்க விருப்​பம் தெரி​வித்து சம்​பந்​தப்​பட்ட பெண்​ணின் பள்ளி நண்​பர் அய்​யாஸ் தாஜ் மதா​ரே, என்​பவர் தொடர்பு கொண்டு நேரில் சந்​திக்க அழைத்​துள்​ளார்.
பிப்​ர​வரி 8-ம் தேதி ஒரு ஓட்​டலில் நடந்த சந்​திப்​பின்போது, அய்​யாஸ் அந்​தப் பெண்​ணுக்​குக் கொடுத்த குளிர்​பானத்​தில் போதை மருந்து கலந்​துள்​ளார். போதை மருந்​தால் பெண் மயங்​கியதும் அவரை பாலியல் வன்​கொடுமை செய்து அதை வீடியோ​வாக பதிவு செய்​துள்​ளார். அந்த காட்​சிகளை சமூக வலை ​தளங்​களில் வெளி​யிட்டு விடு​வ​தாக மிரட்டி சுமார் ரூ.4 லட்​சம் வரை ஏமாற்றியுள்ளார். இதற்கு அவரது நண்பர் அய்​யாஸ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அந்​தப் பெண்​ணுக்கு பில்​லி, சூனி​யம் செய்து​விடு​வோம் என்​றும் அவர்​கள் மிரட்​டி​யுள்​ளனர். கடந்த மே மாதம் 31ம் தேதி அய்​யாஸ், அவரது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இரு​வரும் சேர்ந்து அந்​தப் பெண்ணைக் கல்​மேஷ்வர் என்ற பகு​திக்கு கடத்​திச் சென்றுள்ளனர்.
அங்கு ஹஸ்​ரத் மவுலானா என்ற மதப் பெரிய​வர் முன்​னிலை​யில், அந்​தப் பெண்​ணின் விருப்​பத்​துக்கு மாறாக வலுக்​கட்​டாய​மாக மத மாற்​றச் சடங்​கு​களைச் செய்​துள்​ளனர். இதையடுத்து அவரை, மிரட்டி அய்​யாஸுடன் அவருக்கு திரு​மணம் செய்து வைக்கப்பட்டுள்​ளது. இவ்​வாறு அந்த முதல் தகவல் அறிக்​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.
இதையடுத்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தி, அய்​யாஸ் தாஜ் மதா​ரே, அவரது கூட்​டாளி அமீன் ஷேக் ஆகிய இரு​வரை​யும் கைது செய்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சட்​ட​விரோத​மாக இந்த திரு​மணத்தை நடத்தி வைத்த மவுலா​னாவை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33