RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மாவட்ட செயலாக்க குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்ந.மிரு ணாளினி தலை மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப் படையில் இன்றையதினம் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மாவட்ட செயலாக்க குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக் கூட் டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் 181 மூலம் வரப்பெற்ற புகார் மற்றும் நடவடிக்கை விபரம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பெண் குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விபரம், பெண் குழந்தை பாது காப்பு குறித்து பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றவும், மேலும் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் விக்னேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33