RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்காக வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், இத்திட்டங்கள் குறித்து அனைத்து மக்களுக்கும் போதுமான விழிப்புணர்வு இல்லை. மக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இத்தகவல்கள் வழங்கப்படுகின்றன.

1. பண்டிட் தீன்தயாள் உபத்யாய் உன்னத் கிரிஷி சிக்ஷா யோஜனா

துவக்கம்: 2016

நோக்கம்:
வேளாண் கல்வியை மேம்படுத்துதல்.

திட்ட விளக்கம்:
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மூலம் “வேளாண்மையில் இளைஞர்களை ஈடுபட வைத்தல் மற்றும் நிலைபெற வைத்தல்” (ARYA) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் கிரிஷி விக்யான் கேந்திரா (KVK) எனப்படும் வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


2. தேசிய வேளாண் சந்தை (e-NAM)

துவக்கம்: 14 ஏப்ரல் 2016

நோக்கம்:

  • பல்வேறு மாநிலங்களில் உள்ள மின்னணு வேளாண் சந்தைகளை (e-Mandis) ஒருங்கிணைத்தல்.
  • விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு சிறந்த விலையைப் பெற வழிவகை செய்தல்.

நிதியளிப்பு:
வேளாண் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிதி (ATIF) மூலம் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC) வழியாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

அமல்படுத்தும் நிறுவனம்:
SFAC (Small Farmers’ Agribusiness Consortium) தேசிய வேளாண் சந்தையின் முன்னணி மேம்பாட்டு அமைப்பாக செயல்படுகிறது. இது மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்.


3. பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (PMFBY)

துவக்கம்: 2016

நோக்கம்:
இயற்கை பேரிடர்கள் மற்றும் தடுக்க இயலாத காரணங்களால் பாதிக்கப்படும் உணவுப் பயிர்கள், தானியங்கள் மற்றும் தோட்டப் பயிர்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்குதல்.

திட்ட விளக்கம்:

  • காரிப் (Kharif) பயிர்களுக்கு – 2% காப்பீட்டு கட்டணம்
  • ரபி (Rabi) பயிர்களுக்கு – 1.5% காப்பீட்டு கட்டணம்
  • தோட்டப் பயிர்களுக்கு – 5% காப்பீட்டு கட்டணம்

மீதமுள்ள காப்பீட்டு தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. அரசின் மானியத்திற்கு உச்சவரம்பு எதுவும் இல்லை.


4. மண் வள அட்டைத் திட்டம் (Soil Health Card Scheme)

துவக்கம்: 19 பிப்ரவரி 2015

நோக்கம்:
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்து, மண்ணின் ஆரோக்கியம் குறித்த தகவல்களை வழங்கும் மண் வள அட்டையை அளித்தல்.

நிதியளிப்பு:
மண் ஆரோக்கியப் பரிசோதனைக்கான செலவு மத்திய மற்றும் மாநில அரசுகளால் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

திட்டத்தின் முழக்கம்:
“சுவஸ்த் தாரா, கேத் ஹரா”
(ஆரோக்கியமான பூமி – பசுமையான பண்ணை)

தொடரும்…

Recent News

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

1 6 7 8 9 10 12