RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

VB-G RAM G – திட்டம் இன்று முதல் அமல்

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) மாநிலம் வாரியாக ஊதிய விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான விபி-ஜி ராம் ஜி எனும் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தமிழகத்தி இன்று முதல் அமல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2005 ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசால் 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அமல்படுத்தபட்டது. இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த ஒன்றிய பாஜக அரசை அதற்கு மாற்றாக 125 நாட்கள் வேலை வழங்கும் (விபி-ஜி ராம் ஜி) திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பயணத்தில், கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விபி-ஜி ராம் ஜி சட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. 100 நாள்கள் வேலை இந்தப் புதிய சட்டத்தின் கீழ் தற்போது 125 நாள்களாக உயர்த்தப்பட்டு, இத்திட்டத்துக்காக 2026-27 நிதியாண்டில் ரூ 95,692.31 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களின் பங்கையும் சேர்த்தால் மொத்தத் திட்ட மதிப்பு ரூ 1.51 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஊரக வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரிசர்வ் வங்கியில் புதிய கணக்கைத் தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில், மாநில வாரியாக புதிய ஊரக வேலைத் திட்டத்தில் வழங்கப்படவுள்ள ஊதிய விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியிருகின்றன. அரசு அறிவிப்பின்படி, ஊதிய உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. எந்தவொரு மாநிலத்திலும் தினக்கூலி ரூ.300-க்குக் குறைவாக இருக்காத வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊதிய விகிதங்கள் 15 முதல் 25 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. கேரளம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில், ரூ.360 முதல் ரூ.409 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலைப்பகுதி மாநிலமான சிக்கிமில் ரூ. 450 வரை உயர்த்தப்பட்டுள்ளது

Recent News

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 24 25 26 27 28 33