RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தகவல்

நெல்லை:
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசா யிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் (பொ) இரா.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திரு நெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் விவசா யிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உரிய பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பெய்த கோடை மழையால், பெரும்பாலான நெல் மூட்டைகள் தண் ணீரில் முற்றிலும் நனைந் துள்ளன. இதனால், நெல் மணிகள் முளைத்து. அழுகி வீணாகின்றன என்று செய்தி வெளியானது.
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லினை. மூட்டைகளின் மேல் வைத்து எடுக்கப்பட்டு, இன்று வெளி யிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை செய்தியானது முற்றிலும் தவறானது. நேரடி ஆய்வில், நெல் மூட்டைகள் எதுவும் மழையில் நனைந்து வீணாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி. திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியில் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
மூன்றடைப்பு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் இதுவரை, 1802 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இன்றுவரை 1700 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதம். 102 மெ.டன் நெல் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதேபோல், மூன்றடைப்பு.2 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 494 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை 200 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டு, மீதம் 294 மெ.டன் நெல் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
மீதமுள்ள நெல்லினை இயக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மேற்கூறிய நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் கொள்முதல் நடவடிக்கைகள் 13.05.2026 அன்று நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் $ (20.05.2026) முழுமையாக இயக்கம் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையாத வண்ணம் தார்ப் பாய்கள் கொண்டு மூடி பாதுகாக்கப்படுகிறது.
மேலும், இவ்வாறு தவ றான தகவல் வெளிவர காரணமாக இருந்த நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் பணிபுரியும் நாகராஜபெருமாள். பருவகால உதவுபவர் என்பவரையும், செல்லத்துரை. பருவகால சாவலர் என்பவரையும் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent News

எல் நினோ தாக்கமும்… தமிழகத்தில் உருவெடுக்கும் பாதிப்பும்…

எல் நினோ தாக்கமும்……

சென்னைஎல் -நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட…

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை – திருவாரூர்…

நாகை:நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த…

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை – திருவாரூர்…

நாகை:நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த…

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு – கலெக்டர் ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி…

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள…

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர் பிறந்தநாள் நல உதவிகள் – சமத்துவ விருந்து

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர்…

செங்கல்பட்டு:தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை…

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு

நாகை அருகே பாப்பாகோவில்…

நாகை:நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தென்கிழக்கு ஒன்றியம்…

1 8 9 10 11 12 33